/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திட்டமிடாத பணியால் கேள்வி குறியான கழிவுநீர் பாதை பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் குமுறல்
/
திட்டமிடாத பணியால் கேள்வி குறியான கழிவுநீர் பாதை பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் குமுறல்
திட்டமிடாத பணியால் கேள்வி குறியான கழிவுநீர் பாதை பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் குமுறல்
திட்டமிடாத பணியால் கேள்வி குறியான கழிவுநீர் பாதை பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் குமுறல்
ADDED : ஜன 04, 2024 02:56 AM

திண்டுக்கல்: திட்டமிடாத சாக்கடை பணியால் கழிவுநீர் செல்லும் பாதையில் பிரச்னை ஏற்பட்டு
சமூக பிரச்னை எழுந்துள்ளது. இதனால் மனமுடைந்த நாங்கள் ரோடு மறியல் திட்டத்தில் இறங்க உள்ளோம் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர்.
பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் முன்னேற்ற நல சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் பாரி, துணைத்தலைவர் நடராஜன், ராமன், செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளைசாமி, ராஜமுருகையா, துணைச் செயலாளர் ரசூல்தீன், அமைப்பு செயலாளர் மாரிசாமி கூறியதாவது: பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியின் பொறுப்பற்ற தன்மையால் அல்லாடும் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் மனு கொடுத்தும் பலனில்லை . பி.டி.ஓ.,விடம் முறையிட்டால் நுாறு நாள் பணியாளர்களை கொண்டு ஒப்புக்கு புல் பிடுங்கும்வேலையை மட்டுமே செய்ய முற்படுகிறார். மற்றபடி வளர்ச்சி பணியில் தொடர்ந்து தொய்வுகள் ஏற்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளான சாக்கடை, ரோடு தொடர்பாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கொல்லம்புதுார் முதல் பாலகிருஷ்ணாபுரம் வரை கட்டப்பட்ட சாக்கடை கழிவு நீர் ஐயப்பன் கோயில் அருகே குளத்தில் சென்று சேர வேண்டும்.
ஆனால் அதன் வழித்தடத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் 9வது வார்டு பகுதியினர் கழிவு நீர் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என எதிர்ப்பதால் எங்கள் பகுதியின் கழிவுநீர் வெளியேற்றம் கேள்விக்குறியாகி உள்ளது. திட்டமிடாத பணியால் கழிவுநீர் செல்லும் பாதையில் பிரச்னை எழுந்துள்ளது.
கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் குடியிருப்பு பகுதிக்குள் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியடைகின்றனர். சாக்கடை துார் வார படாமல் உள்ளதால் சகதியாக உள்ளது. இதை பலமுறை எடுத்து கூறியும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
கிராம சபை கூட்டம் பெயரளவிற்கு மட்டும்தான் நடத்தப்படுகிறது. இதில் எந்த ஒரு சமுதாய பிரச்னையும் தீர்வதாக தெரியவில்லை.
குடிநீர், ரோடு, சாக்கடை வரிகள் நிலுவையின்றி செலுத்தியும் எந்த வசதியும் இல்லை எனும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகள் மீது பாவப்படுவதா, கோபப்படுவதா என்ற குழப்பத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிளக்கு வசதி ஓரளவிற்கு இருந்தாலும் ஆங்காங்கே தேவைப்படுகிறது. பாலகிருஷ்ணாபுரம் ஊருக்குள் உள்ள ரேஷன் கடை பகுதி நேரமாக செயல்படுவதால் குடிமை பொருள் வாங்குவதில் சிக்கல் உள்ளது. பொழுதுபோக்கு, பூங்கா வசதியின்றி குழந்தைகள் ரோட்டில் விளையாடுவதால் விபத்து அபாயம் உள்ளது.
பலர் பிளாட்களை வாங்கி போட்டு விட்டு கண்டு கொள்ளாமல் உள்ளதால் அந்த இடத்தில் செடிகள் வளர்ந்து புதர்களாய் மாறியுள்ளது. இதனால் விஷபூச்சிகளின் நடமாட்டம் உள்ளது என்றனர்.