/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு! உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கலாமே

ADDED : மே 27, 2024 06:22 AM

மாவட்டத்தில் காய்கறி கடைகள், ஹோட்டல்களில் தடை பிளாஸ்டிக் கவர்கள்,கப்கள், பிளேட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அதிகளவில் பூக்கள், பழங்கள், மஞ்சள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். அவற்றை பயன்படுத்திய பின் முறைப்படி அப்புறப்படுத்தாமல் நேரடியாக குப்பையில் சேர்ப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வனப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. உள்ளாட்சி அமைப்பினர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகள் உள்ளிட்ட பகுதிகளை சோதனைகளை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு மக்கும் குப்பை மக்கா குப்பைகளை பிரித்து வழங்கும் முறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துணி பைகள் பாத்திரங்களை கொண்டு பொருட்களை வாங்கவும், விற்கவும், அறிவுறுத்த வேண்டும். தடை பிளாஸ்டிக் பொருட்களை வழங்கும் கடைகளுக்கு பாரபட்சமின்றி கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.