/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துணை முதல்வர் வருகை அலுவலர்கள் விடுப்புக்கு தடை
/
துணை முதல்வர் வருகை அலுவலர்கள் விடுப்புக்கு தடை
ADDED : அக் 19, 2024 05:35 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லுக்கு துணை முதல்வர் உதயநிதி வருவதையொட்டி அதிகாரிகள்,அலுவலர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்து வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி திண்டுக்கல்லுக்கு அக்.20 மாலை வருகிறார். அன்று இரவு தங்கும் அவர் அக்.21 காலை நத்தத்தில் நடக்கும் தி.மு.க., நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையொட்டி நகரின் முக்கிய ரோடுகளில் பேட்ச் ஒர்க்,ரோடுகளை சுத்தப்படுத்துவது, சாக்கடைகளை துார்வாருவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், மற்ற துறை அதிகாரிகள், அலுவலர்கள் அக்.20, 21ல் விடுப்பு எடுக்காது பணியில் இருக்க வாய் மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது இது ஒருபுறம் இருக்க தி.மு.க., வினரும் துணை முதல்வரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

