/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடர் மழையால் வாழை விலை வீழ்ச்சி
/
தொடர் மழையால் வாழை விலை வீழ்ச்சி
ADDED : நவ 22, 2024 02:28 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சிறுமலை, அகஸ்தியர்புரம், தாலக்கடை, புதுார், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை பழ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக வாழைத்தார் விற்பனை குறைந்தது.
அக்., மாதம் ஒரு வாழைத்தார் ரூ. 1000 முதல் ரூ.1500 வரை விற்பனையான நிலையில் நேற்று ரூ.500 முதல் ரூ.800 வரையே விற்பனையானது. விலைசரிவால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.