ADDED : ஜன 18, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வாழைப்பழம் சூரை விழா நடைபெற்று வருகிறது.
தை மாதம் கால சூழ்நிலை மாற்றம் ஏற்படும் காலம் என்பதால் கால்நடைகள், கிராமத்தினருக்கு நோய் நொடிகள் ஏற்படாத வண்ணம் இவ்விழா நடத்தப்படுகிறது. மேலும் விவசாயம் செழிக்கவும் வாழைப்பழங்கள் சூரை விடப்படுகின்றன.
நேற்று கிராமத்தில் வாழைப்பழ கூடைகள் பூசாரி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னர் கோயிலில் அபிஷேகம் நடத்தப்பட்டு வாழைப்பழத்தை பெறுவதற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.