/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்
/
காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்
ADDED : டிச 27, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி, ஆயக்குடி, பொன்னிமலை சித்தர் கரடு அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் டூவீலரில் செல்லும் போது காட்டுப்பன்றி மோதியதில் பலத்த காயமடைந்தார்.
பழநி பழைய ஆயக்குடியைச் சேர்ந்த கருப்புசாமி 59. இவர் மானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு பொன்னிமலை சித்தர் கரடு அருகே தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை தோட்டத்திற்குச் சென்று டூவீலரில் சென்று உள்ளார். அப்போது திடீரென குறுக்கே வந்த காட்டுப்பன்றி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர்அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

