/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு தேவை; விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால் நடவடிக்கை அவசியம்

ADDED : டிச 27, 2025 06:13 AM

பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர். கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை மார்கழி மாதம் துவங்கியதிலிருந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலைபேசி பேசிக்கொண்டே வந்த பக்தர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். நேற்று டூவீலர் மோதியதில் பக்தர்கள் காயம் அடைந்தனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு என அமைக்கப்பட்ட தனிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி உள்ளது. மேலும், அப்பாதையில் திறந்தவெளி கழிப்பிடமாக சிலர் பயன்படுத்தி வருவதால் அசுத்தமாக உள்ளது. இதனால் பக்தர்கள் முக்கிய சாலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் பஸ், லாரிகள் அதிக வேகத்தில் செல்கின்றன. நெடுந்தூரம் நடந்து வரும் பக்தர்கள் உடனடியாக விலக முடியாத சூழல் ஏற்பட்டு விபத்து அபாயம் உருவாகிறது.
ரோடுகளில் சில இடங்கள் பெயர்ந்து கற்களோடு இருப்பதால் பாதயாத்திரை வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றன.
முக்கிய இடங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மாலைக்கு மேல் பயணிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. ஒளிரும் பட்டைகள், குச்சிகளை அணிந்து வர பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இரவு நேர பாதயாத்திரை தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் தகுந்த வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரைவில் செய்து தர வேண்டும். உடுமலை, பொள்ளாச்சியில் வழியாக வரும் பக்தர்கள் அதிவேக நான்குவழிச் சாலையில் நடந்து வருகின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பை உறுதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.