/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தடை புகையிலை பறிமுதல் ; அபராதம்
/
திண்டுக்கல்லில் தடை புகையிலை பறிமுதல் ; அபராதம்
ADDED : ஜூலை 12, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி, அலுவலர்கள் செல்வம், முருகன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் மேற்கு ரதவீதி, தினசரி மார்கெட் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
காசிராஜன், நாகராஜன் ஆகியோரின் கடைகளில் இருந்து 3 கிலோ குட்கா, கூல் லிப், பான் மசாலா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரெட்டியார்சத்திரம் தமிழ்செல்வன் கடையில் நடத்திய சோதனையில் 5 கிலோ குட்கா ,பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவருக்கும் தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.