/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுக்கடை மூடல் போராட்டம் அரசியல் நாடகம் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

ADDED : செப் 26, 2024 05:21 AM
திண்டுக்கல்: ''மத்திய அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக்கூடிய அரசியல் நாடகம்'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : வி.சி.க., தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தி.மு.க., மது கடைகளை மூட வேண்டும் என போராட்டம் நடத்தியதோடு மதுக்கடையை மூடுவோம் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது.
மத்திய அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக்கூடிய அரசியல் நாடகம். மதுவிலக்கு கொள்கையை கேலி பொருளாக மாற்றி உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் பங்கு என வி.சி.க.,வில் பலர் பேசுகின்றனர் பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு பரப்பியதாக இயக்குநர் மோகனை தி.மு.க., அரசு உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளது.
மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு மக்கள் திருப்பதி கோயில் நிர்வாகத்தில் பக்கமே இருப்பார்கள் அங்கு செல்வதில் அதிகமான பேர் தமிழர்கள் என்றார்.