/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்; டி.வி.எஸ்., குழுமம் வழங்கியது
/
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்; டி.வி.எஸ்., குழுமம் வழங்கியது
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்; டி.வி.எஸ்., குழுமம் வழங்கியது
பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்; டி.வி.எஸ்., குழுமம் வழங்கியது
ADDED : செப் 09, 2025 12:18 AM

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக டி.வி.எஸ்., குழுமம் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் பேட்டரி பஸ் ஒப்படைக்கப்பட்டது.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவீதி வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன், சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் செல்ல இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் 2024 மார்ச் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 16 பேட்டரி பஸ் என 35 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் டி.வி.எஸ்., குழுமம் நிறுவனத்தின் சார்பில் குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் 23 பேர் அமரக்கூடிய பேட்டரி பஸ்சை வழங்கி உள்ளார். சிறப்பு பூஜைகளுக்குப் பின் கோயில் சேர்மன் சுப்பிரமணியத்திடம் ஒப் படைக்கப்பட்டது.