/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பக்தர்கள் மீது மோதிய பேட்டரி பஸ்
/
பழநியில் பக்தர்கள் மீது மோதிய பேட்டரி பஸ்
ADDED : ஏப் 02, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி,: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களை கிரி வீதியில் அழைத்து செல்ல பேட்டரி பஸ் ,பேட்டரி கார் இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். வின்ச் ஸ்டேஷன் அருகே வரும்போது பின்னால் வந்த பேட்டரி பஸ் பக்தர்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. அரவக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணவேணி 25, அனிதா 23, சிறுவன் பேட்டரி பஸ் மோதியதில் காயமடைந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பினர்.

