/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுக்கடை பஞ்சாயத்தை தீர்க்க சென்ற பு.த., செயலருக்கு அடி
/
மதுக்கடை பஞ்சாயத்தை தீர்க்க சென்ற பு.த., செயலருக்கு அடி
மதுக்கடை பஞ்சாயத்தை தீர்க்க சென்ற பு.த., செயலருக்கு அடி
மதுக்கடை பஞ்சாயத்தை தீர்க்க சென்ற பு.த., செயலருக்கு அடி
ADDED : அக் 11, 2025 04:34 AM
வடமதுரை: மதுக்கடை தகராறை பஞ்சாயத்து செய்து தீர்க்க சென்ற புதிய தமிழகம் கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிலாத்தை சேர்ந்தவர் புதிய தமிழகம் கட்சி வடமதுரை ஒன்றிய செயலாளர். ஆண்டவர் 30. இவரது நண்பர் மணிகண்டன் தென்னம்பட்டி மதுக்கடைக்கு சென்றிருந்தார். அங்கு எலப்பார்பட்டி தங்கப்பாண்டி 28, ரகுமாயன் 24, களர்பட்டி பிரவீன்பாண்டி 27, கோடாங்கி சின்னான்பட்டி திலீபன் 22 ,ஆகியோர் பீர் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதை மணிகண்டன் ஆண்டவருக்கு தெரிவிக்க, அங்கு சென்ற ஆண்டவர் தகராறு செய்தவர்களை கண்டித்தார். அப்போது 4 பேரும் ஆண்டவரின் அலைபேசியை பறித்து வீசிவிட்டு தாக்கினர். இதில் ஆண்டவர் காயமடைந்தார். திலீபனை தேடும் வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி மற்ற மூவரையும் கைது செய்தார்.