நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி மாணிக்க விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 48வது நாள் மண்டல பூஜை நடந்தது.
விழாவையொட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், பஞ்சகவ்ய யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. மாணிக்க விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.