/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் கழிவு நீரை ஊற்றுவதை தடுக்க கண்டிப்பு காட்டுங்க; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்

ADDED : செப் 08, 2025 05:22 AM

நாட்டில் துாய்மை பாரதம் என மத்திய அரசு திட்டம் வகுத்து திறந்தவெளி கழிப்பிடமே இருக்க கூடாது என வீடுகளிலேயே கழிவறைகள் அமைக்க நிதியுதவி வழங்குகிறது. இதுதவிர பொது சுகாதார வளாகங்களும் அதிகளவில் அமைக்கப்படுகின்றன.
இப்படி துாய்மையாக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடை, இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவு நீரை எவ்வித தயக்கமும் இல்லாமல் நடுரோட்டில் ஊற்றும் பழக்கம் பரவலாக அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது.
காண்போர் அதிர்ச்சி அடையும் வகையில் சில இடங்களில் அதிவேக வாகனங்கள் பயணிக்கும் நான்கு வழிச்சாலையில் கூட இவ்வாறு கழிவுநீரை ஊற்றுகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் ஊற்றப்படும்போது அவ்விடத்தில் தார் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக மாறி விடுகிறது.
பொதுவாக ரோடு புதுப்பித்தல் பணி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் அதுவரை அதே நிலை நீடிக்கிறது. அங்கு ஏற்பட்டுள்ள பள்ளம், தேங்கி நிற்கும், ஊற்றப்பட்ட கழிவு நீரை கண்டு டூவீலர் போன்ற இலகு ரக வாகனங்கள் அப்பகுதியில் ஒதுங்கி செல்ல முற்படும்போது மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவு நீரில் ஏதாவது சாப்பிடும் பொருள் கிடைக்குமா என தெருக்களில் வளரும் நாய்கள் தேடும்போது வாகனங்களில் சிக்கும் நிலையும், அதனால் டூவீலர்கள் விபத்துகளில் சிக்குகின்றன. ரோட்டில் கழிவு நீர் ஊற்றும் நிலை மாற அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.