/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிலோ ரூ.10: ஒட்டன்சத்திரத்தில் விலை சரிந்த பீன்ஸ்
/
கிலோ ரூ.10: ஒட்டன்சத்திரத்தில் விலை சரிந்த பீன்ஸ்
ADDED : ஆக 19, 2025 01:23 AM
ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை சரிந்து கிலோ ரூ. 10 க்கு விற்றதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்கள் கண்ணனுார், வடகாடு, பெத்தேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பீன்ஸ் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றை கேரள வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.பத்து நாட்களுக்கு முன்பு பீன்ஸ் கிலோ ரூ.25 க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் மூன்று நாட்களாக பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானது. இந்த விலையானது பீன்ஸ் பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.