ADDED : பிப் 18, 2026 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5ம் நாளான நேற்று தட்டு, கரண்டியுடன் தாளம் அடித்து நுாதன போராட்டம் நடத்தினர். ஐ.சி.டி.எஸ். ஊழியர், உதவியாளர் சங்க பொறுப்பாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில இணை செயலாளர் இந்திரா உட்பட 50க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

