ADDED : ஜன 13, 2026 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பாகாநத்தம் இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் சார்பில் புத்துார், ஏ.கோம்பை பகுதியில் மலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இசை நிறுவன நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.
ஆலோசகர் சின்னையா வரவேற்றார். பயிற்றுனர் தனலட்சுமி பயிற்சி தந்தார். பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது.

