தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒரு வாரத்தில் கோமாரி தடுப்பூசி பணி நிறைவு; இணை இயக்குனர் தகவல்

 ஒரு வாரத்தில் கோமாரி தடுப்பூசி பணி நிறைவு; இணை இயக்குனர் தகவல்

 ஒரு வாரத்தில் கோமாரி தடுப்பூசி பணி நிறைவு; இணை இயக்குனர் தகவல்


ADDED : ஜன 13, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 2 லட்சத்து 27ஆயிரம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள கால்நடைகளுக்கு 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு பணிகள் நிறைவு பெறும் '' என மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் விஷ்ணுகந்தன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 106 கால்நடை மருந்தகங்கள், ஐந்து கால்நடை மருத்துவமனைகள், ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை, 61 கால்நடை கிளை நிலையங்கள் என 173 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

இதில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் டிச.29ல் துவங்கி 2026 ஜனவரி 11 வரை நடந்தது. 2 லட்சத்து 91 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நேற்று வரை 2 லட்சத்து 27 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. மீதியுள்ள 64,700 தடுப்பூசிகள் ஒரு வார காலத்தில் செலுத்தப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us