ADDED : நவ 09, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: பன்னியாமலையில் தேனீக்களை வளர்ப்பது குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
குடுமியான்மலை வேளாண்மை கல்லுாரி பூச்சியியல் துறை பேராசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
பன்னியாமலை பகுதியில் உள்ள குணசேகரன்- மாரியம்மாள் தம்பதியரின் விவசாய தோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரியில் இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
தேனாடையில் இருந்து தேனை எப்படி பிரித்தெடுப்பது, தேனீ கூட்டை பராமரிக்கும் முறை, தேனின் மருத்துவ பயன்கள், தேன்கூடு விற்பனை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

