/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் டிச.1-ல் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
/
பழநியில் டிச.1-ல் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பழநியில் டிச.1-ல் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பழநியில் டிச.1-ல் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 09, 2025 06:15 AM
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச.1 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி நாளை (நவ.10) முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.
பழநி மேற்கு ரத வீதியில் முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஏப்.17. ல் பாலாலயம் நடைபெற்றது.
தற்போது திருப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை (நவ. 10) காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதை தொடர்ந்து டிச. 1ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக பழநி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித் துள்ளது.