/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெகு அருகில் என்பதும் ஒரு பிரச்னை : வடமதுரையில் மூடப்பட்ட அரசுப் பள்ளி
/
வெகு அருகில் என்பதும் ஒரு பிரச்னை : வடமதுரையில் மூடப்பட்ட அரசுப் பள்ளி
வெகு அருகில் என்பதும் ஒரு பிரச்னை : வடமதுரையில் மூடப்பட்ட அரசுப் பள்ளி
வெகு அருகில் என்பதும் ஒரு பிரச்னை : வடமதுரையில் மூடப்பட்ட அரசுப் பள்ளி
ADDED : அக் 19, 2025 10:09 PM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எஸ்.குரும்பபட்டியில் கிராமத்திற்குள்ளே வீடுகளுக்கு அருகில் இருப்பதாலே மாணவர் சேர்க்கையில்லாமல் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி மூடப் பட்டுள்ளது.
சிங்காரக்கோட்டை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியில் செயல்பட்டு வந்த அரசு கள்ளர் துவக்கப் பள்ளி போதிய மாணவர்கள் இல்லாமல் கடந்த 2012ல் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி குழந்தைகள் சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, வடமதுரை என பல ஊர்களுக்கும் சென்று படிக்கும் நிலை இருந்தது. கிராமத்தினர் எடுத்த முயற்சியால் 2021ல் இங்கு மீண்டும் துவக்கப் பள்ளி 10 மாணவர்களுடன் செயல்பட துவங்கியது. இதற்காக ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் மராமத்து செய்யப்பட்டது.
ஆனால் கடந்த இரு ஆண்டுகளிலும் மாணவர்கள் இங்கு படிக்காமல் சிங்காரக்கோட்டை அரசு பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதனால் பள்ளி மூடப்பட்டுள்ளது.
கிராமத்தினர் கூறுகையில், சிறு குழந்தைகளை இங்கு படிக்க அனுப்பும்போது திடீரென வீடுகளுக்கு வந்துவிடுகின்றனர். இதனால் பெற்றோர் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தைகள் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் சிங்காரக்கோட்டை பள்ளிக்கு சக பெரிய மாணவர்களுடன் அனுப்பும்போது மாலை வரை அங்கே படித்துவிட்டு பாதுகாப்பாக திரும்புவர்'என்றனர்.