sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாழ்வின் மகத்துவத்தை புரிய வைக்கும் பகவத்கீதை தாங்க முடியாத துயரத்திலிருந்தாலும் மனதில் தெளிவு

/

வாழ்வின் மகத்துவத்தை புரிய வைக்கும் பகவத்கீதை தாங்க முடியாத துயரத்திலிருந்தாலும் மனதில் தெளிவு

வாழ்வின் மகத்துவத்தை புரிய வைக்கும் பகவத்கீதை தாங்க முடியாத துயரத்திலிருந்தாலும் மனதில் தெளிவு

வாழ்வின் மகத்துவத்தை புரிய வைக்கும் பகவத்கீதை தாங்க முடியாத துயரத்திலிருந்தாலும் மனதில் தெளிவு


ADDED : செப் 07, 2024 07:02 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான பகவத் கீதையை எளிமையான முறையில் இலவசமாக படிக்க விருப்புவோருக்கு திண்டுக்கல் வேதாந்தா பவுண்டேஷனை சேர்ந்த நிர்வாகிகள் கற்று தருகின்றனர். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி பல்வேறு மக்கள் மனதிலும் பகவத் கீதையின் மகத்துவத்தை புரியவைத்துள்ளனர். அவர்கள் கருத்துக்கள் இதோ ...

.........

துயரத்திலிருந்து விடுபடலாம்

சுவாமி ஞானசிவானந்தா , ஆசிரியர் ,திண்டுக்கல்: 1986 லிருந்து சுவாமி ஓம்காரனந்தா,சுவாமி குருபரனானந்தா ஆகியோரிடம் மாணவராக இருந்து அவர்கள் சொல்வதை கேட்டு நான் பகவத் கீதையை கற்று கொண்டேன். பகவத் கீதையில் சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. இதை எல்லா மதத்தினரும் கற்று கொள்ளலாம். வேதாந்தா பவுண்டேஷன் மூலம் நான் எளிமையான தமிழில் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கிறேன். தாங்க முடியாத துயரத்திலிருந்தாலும் இதை கற்பதன் மூலம் நம் மனதில் தெளிவு ஏற்பட்டு அதிலிருந்து விடுபடலாம்.

.....

இலவசமாக கற்று கொடுக்கிறோம்

பி.எம்.எஸ்.வெங்கடேஷன்,நிர்வாகி,வேதாந்தா பவுண்டேஷன்,திண்டுக்கல்: பகவத் கீதையின் மூலம் நாம் அன்றாட வாழ்வியலை கற்று கொள்ளலாம். இதை எளிமையான முறையில் 7 ஆண்டுகளாக வேதாந்தா பவுண்டேஷன் மூலம் இலவசமாக கற்று கொடுக்கிறோம். வாராவாரம் செவ்வாய் கிழமைகளில் திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டிலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுமலை அடிவாரம் ததத்வானந்தா ஆசிரமத்திலும் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. ஏராளமானோர் பகவத் கீதையை ஆர்வமாக கற்றுகொள்கின்றனர்.

.....

ஆத்ம தத்துவம் கிடைக்கும்

அறிவுடைநம்பி,மாணவர்,திண்டுக்கல்: ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் 3 நுால்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை பிரஸ்தான திரயம் என சொல்வார்கள். அதில் முக்கியமானது பகவத் கீதை தான். இதை யார் வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். இதை கற்றுகொள்வதன் மூலம் ஆத்ம தத்துவத்தை அறியமுடிகிறது. வயது முக்கியமல்ல ஆர்வம் தான் முக்கியம்.

.....

மனதை ஒருநிலைப்படுத்தும்

டாக்டர் மங்கையர்கரசி,உறுப்பினர்,வேதாந்தா பவுண்டேஷன்,திண்டுக்கல்: மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்தநுால் மூலம் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் மனித உயிர்கள் பிறப்பின் நோக்கத்தை பகவத்கீதை எடுத்துரைக்கிறது. கஷ்டங்கள்,துயரங்கள்,சுமைகள் எதுவாக இருந்தாலும் இதை கற்பதால் பெரியதாக தெரிவதில்லை. நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்துகிறது.

......

தெளிவு பிறக்குகிறது

ரோகிணி நடராஜன்,உறுப்பினர்,வேதாந்தா பவுண்டேஷன்,திண்டுக்கல்: பகவத் கீதையை கற்று கொடுப்பதற்காக தனியாக பள்ளிகள் செயல்படுவதில்லை. எளிய தமிழில் வேதாந்தா பவுண்டேஷன் மூலம் திண்டுக்கல் மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது. வாழ்வின் அவசியமும் பொருமையும் இதை கற்பதால் நமக்குள் பண்புகளாக தோன்றுகிறது. சிலர் பல்வேறு சிக்கல்களால் அவதிப்படும் நிலை ஏற்படும். அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தினால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.






      Dinamalar
      Follow us