ADDED : ஆக 01, 2025 02:06 AM

பழநி: குறுவட்ட போட்டியில் பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மாணவியர் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பழநி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையே அ குறுவட்ட தடகளப் போட்டிகள் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்றன. இதில் பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் உயரம் தாண்டுதல் கோல் ஊன்றி தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் சோபிகா , 3000 ,1500 ,800 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அபிநயா , 19 வயது மாணவியர் பிரிவில் 3000 ,1500 , 800 மீட்டர் ஓட்டத்தில் காவியா ஸ்ரீ முதலிடம் பெற்றனர்.
இவர்கள் தனிநபர் சாம்பியன் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
19 வயது மாணவர் பிரிவில் போலோன்றி உயரம் தாண்டுதலில் ஹரிஷ் முதலிடம் பெற்ற இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.
மாணவர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து பாரத் வித்யா பவன் பள்ளி மாணவர்கள் சாதனைப்படுத்துள்ளனர் .இவர்களை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.

