ADDED : டிச 12, 2025 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநில தலைமையகத்தில் தமிழ் தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
பழநியில் உள்ள தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநில தலைமையகத்தில் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர் தலைமையில் தமிழ் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாள் முழுவதும் அவரது படத்திற்கு மரியாதை செய்யும் வகையில் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

