ADDED : டிச 17, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள், அய்யலுார் மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 696 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை காந்திராஜன் எம்.எல்.ஏ., வழங்கினார். பேரூராட்சி தலைவர்கள் நிருபாராணிகணேசன், கருப்பன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, கணேஷ்வதி, விநாயகம் வரவேற்றனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன, துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, பேரூராட்சி கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், சுப்பிரமணி, மகேஸ்வரி, விஜயா பங்கேற்றனர்.

