/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பீஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் உறுதி
/
பீஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் உறுதி
பீஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் உறுதி
பீஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சர் உறுதி
UPDATED : நவ 16, 2025 04:46 AM
ADDED : நவ 16, 2025 04:02 AM
திண்டுக்கல்: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் பணியை (எஸ்.ஐ.ஆர்.,) த.வெ.க., எதிர்ப்பது தவறில்லை என அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அளித்த பேட்டி: பீஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது. தென் மாநிலங்களில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பா.ஜ., திட்டம் எதிரொலிக்க அடிப்படையான வாய்ப்புக்கூட இல்லை. எஸ்.ஐ.ஆர்., தேவை இல்லதாதது. 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எஸ்.ஐ.ஆர்.ல் தவறுகள் நடக்கக்கூடாது என்றே அனைவரும் அச்சப்படுகிறார்கள்.
எஸ்.ஐ.ஆர்., குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் எந்தக் கருத்தும் சொல்லலாம். இது ஜனநாயக நாடு. சுதந்திரமாக செயல்படக் கூடியது.
ஆனால் தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை வந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
எஸ்.ஐ.ஆர். த.வெ.க., எதிர்ப்பதில் தவறில்லை. அதான் நியாயம். தி.மு.க.,வின் பி -டீம் தான் த.வெ.க. என அர்ஜுன் சம்பத் கூறியது தவறானது. தி.மு.க.,விற்கு எந்த பி- டீமும் கிடையாது. அரசியல் கூட்டணி மட்டும் தான் உள்ளது. 11 மருத்துவக்கல்லூரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை என சி.பி.ஐ.,வழக்குத்தாக்கல் செய்துள்ளது. புகார் மீதான உண்மைத்தன்மையை அவர்கள் விசாரணை செய்வார்கள்.
எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க., பயப்படாது. யார் மீதும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார். தயக்கம் என்பது துளி அளவும் இருக்காது' என்றார்.

