தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பீஹார் பட்டாணி வரத்து அதிகரிப்பு 'கொடை'பட்டாணி விலை வீழ்ச்சி

 பீஹார் பட்டாணி வரத்து அதிகரிப்பு 'கொடை'பட்டாணி விலை வீழ்ச்சி

 பீஹார் பட்டாணி வரத்து அதிகரிப்பு 'கொடை'பட்டாணி விலை வீழ்ச்சி


ADDED : மார் 13, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 02:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: -பீஹார் பட்டாணி வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் ஸ்வீட் பட்டாணி விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் பட்டாணி சாகுபடி செய்யப்படுகிறது. டிசம்பரில் நடவு செய்யப்பட்ட ஸ்வீட் பட்டாணி தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத சூழல், பனியின் தாக்கம் குறைவு என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பட்டாணி சாகுபடி குறைந்தது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட பட்டாணி கோவை, திருச்சி, சென்னை, மதுரை, பெங்களூரு மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து பீஹார் மாநிலம் ராஞ்யிலிருந்து பட்டாணி வரத்து அதிகரித்து கிலோ ரூ.25க்கு விற்கப்படுவதால், கொடை பட்டாணிக்கு விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பூண்டி விவசாயி கோபால் கூறுகையில்'' நடப்பாண்டில் 20 ஆயிரம் ஏக்கரில் பட்டாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது 2025ல் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு சுருங்கியுள்ளது. நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் விலை வீழ்ச்சி மேலும் பாதித்தது. எதிர்வரும் வாரங்களில் பீஹார் பட்டாணி வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்'கொடை' பட்டாணி விலை அதிகரிக்கும் ''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us