/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேளாண் விஞ்ஞானி தோட்டத்திற்கு தீ வைப்பு
/
வேளாண் விஞ்ஞானி தோட்டத்திற்கு தீ வைப்பு
ADDED : மார் 13, 2026 02:04 AM

கொடைரோடு: திண்டுக்கல்மாவட்டம் கொடைரோடு அருகே மத்திய ,மாநில அரசுகளின் விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி அழகர்சாமி தோட்டத்தில் முன்பகை காரணமாக தீ வைக்கப்பட்டதில் நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகள், பாலி ஹவுஸ் எரிந்தன.
பள்ளபட்டி செக்போஸ்ட் அருகே முருங்கை நர்சரி அமைந்துள்ளது. இதனை பள்ளப்பட்டியை சேர்ந்த விஞ்ஞானி அழகர்சாமி , மகன் ஜோதி ராமலிங்கம் நடத்துகின்றனர். இதில் பசுமை குடில் எனப்படும் பாலி ஹவுஸ் அரசின் மானியம் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட முருங்கை ஒட்டுக் கன்றுகளான சந்தனம், செம்மர நாற்றுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவர்களது நிலத்திற்கு அருகே உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்களுடன் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இங்கு தீ வைக்கப்பட்டதில் முருங்கை ஒட்டு நாற்றுகள், பல வகையான மரக்கன்றுகள், பாலி ஹவுஸ் எரிந்தன. நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்தனர்.

