இறுதி ஊர்வலத்தில் இருதரப்பு மோதல்; 10 பேர் மீது வழக்கு
இறுதி ஊர்வலத்தில் இருதரப்பு மோதல்; 10 பேர் மீது வழக்கு
UPDATED : அக் 07, 2026 10:37 PM
ADDED : அக் 07, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே சேர்வீடுபுதுாரை சேர்ந்தவர் வினோத் 25. இவரது உறவினரான நல்லம்மாள் நேற்று இறந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த கணபதி 52, குடியிருப்பு பகுதிகளில் வெடிக்க வேண்டாம் என வினோத்திடம் கூறினார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். காயம் அடைந்த 5 பேர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த வினோத் 25, சிம்பு 21, செல்வம் 30, பஞ்சு 39, செண்பகவள்ளி 36, ராசு 42, கணபதி 52, சூரியகுணா 28, குப்பச்சி 32, ராசு 42, ஆகிய 10 பேர் மீது நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
