UPDATED : அக் 07, 2026 10:33 PM
ADDED : அக் 07, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய துாண்டுவது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரைமுறைபடுத்துவதில் மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மணிகண்டன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளர் பாலன், மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், முருகன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
