sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விபத்துக்களை ஏற்படுத்தும் விளம்பர பலகை

/

 விபத்துக்களை ஏற்படுத்தும் விளம்பர பலகை

 விபத்துக்களை ஏற்படுத்தும் விளம்பர பலகை

 விபத்துக்களை ஏற்படுத்தும் விளம்பர பலகை


ADDED : பிப் 13, 2026 06:08 AM

Google News

ADDED : பிப் 13, 2026 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளம்பர பலகையால் ஆபத்து: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு எழில் நகர் ரோட்டில் மின் கம்பத்தில் ஆபத்து என்று தெரிந்தும் மின்கம்பம் முழுவதும் விளம்பர பலகை அமைத்துள்ளனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மருதமுத்து: --------வீணாகும் குடிநீர்: புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி ரோட்டின் ஓரமாக காவிரி கூட்டு குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை தேவை.

- கி.ரங்கசாமி: ---- ஆபத்து சிக்னல் கம்பம்: பழநி மயில் ரவுண்டானா அருகில் உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் விபத்து ஏற்படும் முன் இதனை சீரமைக்க வேண்டும்.

- அர்ஜுன்: --------- நோய் தொற்று அபாயம்: திண்டுக்கல் மாநகராட்சி 30வது வார்டு திருமலைசாமிபுரம் 1வது தெருவில் பல மாதங்களாக கழிவு நீர் வாய்க்கால் துார்வாரப் படாமல் உள்ளது. இதில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளன. கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

- வீரப்பன்: அபாயத்தில் தேவாங்குகள்: வடமதுரை கே.குரும்பபட்டி மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் மூலம் தேவாங்குகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளன. மின்கம்பத்தில் படரும் கொடிகளை அகற்ற மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாண்டியன்: --------

விபத்து அபாயம்: குஜிலியம்பாறை ரோட்டின் ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து இறைச்சிக் கழிவுகள் கொட்டி வருவதால் தெரு நாய்கள் அடிக்கடி சண்டையிட்டு, வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அ.சந்திர சேகர், மாரம்பாடி. -------சுகாதாரக்கேடு: திண்டுக்கல் நந்தவனப்பட்டி கணேஷ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால், பொது மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. சாக்கடை கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பத்மநாதன்:






      Dinamalar
      Follow us