ADDED : பிப் 13, 2026 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் தொகுதியில் புதிய மருத்துவமனை கட்டடம், புதிய ரேஷன் கடை கட்டடங்கள், பள்ளி கட்டடத்திற்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்தி ராஜன் தலைமை வகித்தார்.
ஸ்ரீராமபுரம், அம்மாபட்டி, வெல்லம்பட்டி, நாகையகோட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய ரேஷன் கடை கட்டடங்கள், கூவக்காப்பட்டியில் புதிய மருத்துவமனை கட்டடம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. கூட்டுறவு பதிவாளர்கள் லோகேந்திரன், மருதமுத்து, செயலாளர்கள் சண்முகவேல், பழனிச்சாமி, தி.மு.க., நிர்வாகிகள் ரெங்கராஜ், ரவிசங்கர், பொன்ராம், முருகவேல், பூவரசன், சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

