/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை', பழநியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
/
'கொடை', பழநியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
ADDED : மார் 17, 2025 06:35 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் வனச்சரணாலயத்தில் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இவ்வனபகுதியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறை பணியாளர்களுடன் பறவை வல்லுநர்கள்,கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் 100க்கு மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக பாம்பே சோலா,வில்பட்டி பள்ளங்கி பெருமாள்மலை, கொடைக்கானல், பெரும்பள்ளம், தேவதானப்பட்டி, பழநி, பூம்பாறை, மன்னவனுார், பேரிஜம் வனச்சரக பகுதிகளில் இப்பணிகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள பழநி மலை காப்புக்காடுகள் ஒட்டன்சத்திரம் ஊரக பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
இறுதி நாளான நேற்று தரைப்பகுதியில் கணக்கெடுப்பு நடந்தது.
இதில் மயில், பனங்காடை தேன்சிட்டு,தேன் பருந்து, மஞ்சள் வாலாட்டி செந்தலைக்கிளி, அரசவால் ஈப்பிடிப்பான், மாங்குயில் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது.
வனச்சரக அலுவலர் ராஜா, வனவர் இளங்கோவன், பழநியாண்டவர் கல்லுாரி மாணவர்கள், வனப்பணியாளர்கள் பங்கேற்றனர்.