/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வால்பாறையிலிருந்து பறவை காவடி
/
வால்பாறையிலிருந்து பறவை காவடி
ADDED : மார் 14, 2026 07:32 AM

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை 56 எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். சண்முக நதியில் அலகு குத்தி கிரேனில் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் பலர் 15 அடி நீளம் அலகு குத்தி வந்தனர்.
50 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருவதை முன்னிட்டு இந்த ஆண்டு வைரவேலை பாதயாத்திரையாக எடுத்து வந்தனர். இதனுடன் பால்காவடி, இளநீர் காவடி, மயில் காவடி ஆகியவற்றையும் எடுத்து வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கிரி வீதியில் வலம் வர முருகன் கோயிலில் தரிசனம் செய்து வைரவேலை வழங்கினர்.

