/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெளிநாட்டிலிருந்து இனப்பெருக்கத்திற்காக திண்டுக்கல் வரும் பறவைகள்
/
வெளிநாட்டிலிருந்து இனப்பெருக்கத்திற்காக திண்டுக்கல் வரும் பறவைகள்
வெளிநாட்டிலிருந்து இனப்பெருக்கத்திற்காக திண்டுக்கல் வரும் பறவைகள்
வெளிநாட்டிலிருந்து இனப்பெருக்கத்திற்காக திண்டுக்கல் வரும் பறவைகள்
ADDED : நவ 11, 2024 04:22 PM

திண்டுக்கல்;பருவநிலை மாற்றத்தால் வெளிநாட்டிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல வகையான பறவைகள் இடம்பெயர்ந்து இனப்பெருக்கம்
செய்து மீண்டும் அதே இடத்திற்கு சென்றன.
பருவநிலை மாற்றத்தால் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து தமிழக பகுதிகளான வேடதாங்கல்,கூத்தங்குளம் உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் ஏராளமாக இடம்பெயர்ந்து வருகின்றன. அந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கவும் தடையும் விதிக்கப்பட்டு அவைகளை பாதுகாக்க அதிகாரிகளும் வழிவகை செய்கின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும்அய்யலுார்,கன்னிவாடி மயிலாப்பூர் குளம்,ஒய்.எம்.ஆர்.பட்டி குளம்,பாலராஜாக்கப்பட்டி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு இந்தாண்டு செப்டம்பரில்'நார்தன்பின்டெய்ல்'எனும் வாத்து வகையிலான பறவைகள் பல லட்சம் கீலோ மீட்டர் துாரம் பயணம் செய்துஇடம்பெயர்ந்து வந்தது. இவைகள் 30 நாட்கள் இக்குளக்கரைகளில் தங்கியிருந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்தது. அதன்
குஞ்சுகள் நல்ல முறையில் வளர்ந்த பின் மீண்டும் குஞ்சுகளோடு இம்மாத துவக்கத்தில் வந்த இடத்திற்கு மீண்டும் சென்றன.
இதைப்பார்த்த திண்டுக்கல் பறவைகள் ஆர்வலர்கள் அப்பறவைகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர். அதில் இவைகள் ஒவ்வொருஆண்டும் இதேபோல் இடம்பெயர்ந்து திண்டுக்கல் பகுதிகளுக்கு வருவது கண்டறியப்பட்டது. இதுபோன்று திண்டுக்கல் வரும்
பறவைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை திண்டுக்கல் வனத்துறை சார்பில் செய்து கொடுத்தால் இன்னும் வரக்கூடிய நாட்களில்இதுபோன்று ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் நம்முடைய மாவட்டத்திற்கு வருவதற்கு வழிவகை செய்யலாம் என
திண்டுக்கல் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த பறவைகள் ஆர்வலர் உமா மகேஸ்வரன் கூறியதாவது: விடுமுறை நாட்களில் பறவைகள் குறித்து ஆராய்வதற்காக எங்கள் குழுவினரோடு பயணித்தோம். அந்த நேரத்தில் பாலராஜாக்கப்பட்டி குளத்தில் வெளிநாட்டை சேர்ந்த'நார்தன்பின்டெய்ல்'இன வாத்துக்கள் சுற்றித்திரிந்தன. இதேபோல் மாவட்டத்தின் சில குளங்களிலும் இப்பறவைகள் இருந்தது.
வனத்துறை சார்பில் இதுபோன்று இடம்பெயரும் பறவைகளுக்காக எந்த வசதியும் செய்வதில்லை. புதிய பறவைகள் இனங்கள் எதுவும் உருவாகியுள்ளதா எனவும் அவர்கள் ஆய்வு செய்வதும் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நம் மாவட்டத்திற்கே பெருமைஎன்றார்.