ADDED : ஜன 03, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி சவுமியாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவி கேட்க எரியோடு பகுதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருடன் டிரைவர் செல்வக்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சவுமியாவை அழைத்து சென்றார்.
வழியிலேயே பிரசவ வலி அதிகமாகஆம்புலன்சிலே மருத்துவ உதவியாளர், உறவினர்கள் பிரசவம் பார்க்க பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

