/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார்த்திகை மாத பிறப்பு: மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
/
கார்த்திகை மாத பிறப்பு: மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாத பிறப்பு: மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாத பிறப்பு: மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED : நவ 18, 2025 04:26 AM

திண்டுக்கல்: கார் த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து இருமுடி ஏந்தி ஐயப்பனை தரிசனம் செய்வர்.
அதன்படி, மலையடிவாரம் ஐயப்ப சுவாமி கோயில், வெள்ளை விநாயகர் கோயில், இந்திரா நகர் ஐயப்ப சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் காலை 5:00 மணி முதல் குவிந்தனர்.
ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குருசுவாமிகள் மூலம் மாலை அணிந்து விரதத்தை கடை பிடிக்க துவங்கினர்.
41 நாள் மண்டல விரதம் இருக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சென்று, ஐயப்பனை வழிபட்டுஜோதி தரிசனம் காண்பர்.
கோ யில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார்.