/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ.,-- அ.தி.மு.க., கூட்டணி எழுச்சி இல்லாத கூட்டணி சொல்கிறார் காங்., முன்னாள் மாநில தலைவர்

ADDED : ஏப் 22, 2025 06:34 AM

பழநி: ''பா.ஜ.,- -அ.தி.மு.க., கூட்டணி எழுச்சி இல்லாத கூட்டணி,'' என, பழநியில் காங்., மாநில முன்னாள் தலைவர் அழகிரி கூறினார்.
முருகன் கோயிலில் தரிசனம் செய்த பின் அவர் கூறியதாவது: நாட்டில் ஒற்றுமை தான் முக்கியம். பிரிவினை அல்ல.
இந்திய எல்லைக்குள் வாழ்கிறவர்கள் அனைவரும் இந்தியர்கள் என மகாத்மாகாந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றார்.
இந்தியா வலிமை மிக்க நாடாக இருப்பதற்கு காரணம் ஒற்றுமை ஒன்று தான்.
துணை ஜனாதிபதியோ ஜனாதிபதியை கேள்வி கேட்க கூடாது என்கிறார். ஜனநாயகத்தில் யாரிடமும் கேள்வி கேட்கலாம். இது உச்சநீதிமன்ற நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்காக தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் பல்கலை வேந்தராகவும் உள்ள முதல்வர் ஸ்டாலின். இதனை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.,- -பா.ஜ.,கூட்டணி அ.தி.மு.க.,வின் தொண்டர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் அ.தி.மு.க., சிதையும் நிலை ஏற்படும். இண்டியா கூட்டணி தான் வெற்றி பெறும். அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது. அதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். கட்சி பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான். ஈ.வே.ரா.,பேசாததையா பொன்முடி பேசியுள்ளார். சவுக்கு சங்கர் வீட்டில் அத்து மீறி நடந்தது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்., தலைவர் செல்வபெருந்தகைக்கும் தொடர்பு இல்லை என்றார்.