நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி; திண்டுக்கல் லோக்சபா தேர்தலுக்கான ஆத்துார் சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் காரமடையில் நடந்தது.
அமைப்பாளர் தனபாலன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் உடுப்பி கங்காதரன் வரவேற்றார். பொறுப்பாளர் சுபநாகராஜன், பார்வையாளர் மகாலட்சுமி பேசினர். மண்டல் தலைவர்கள் ராமமூர்த்தி, அயனவேல், விக்னேஷ், வீரக்குமார், தண்டபாணி, பார்வையாளர்கள் லட்சுமண மணிகண்டன், தேவராஜ், ரகு, புதுமைராஜா, துணைத் தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.