/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., மாவட்ட தலைவர் ஜாமினில் விடுதலை
/
பா.ஜ., மாவட்ட தலைவர் ஜாமினில் விடுதலை
ADDED : ஜன 07, 2025 12:24 AM
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கைதான பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், பொது செயலாளர் செந்தில்குமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பழநியில் பா.ஜ.,மகளிர் அணியினர் ஜன.,3ல் மதுரையில் நடந்த ஊர்வலத்திற்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த திருமண மண்டபத்திற்கு பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சியினருடன் சென்றார்.
மண்டபத்திற்கு அருகே இருந்த தனியார் பாரில் நுழைந்து காலையிலிருந்து மது விற்பனை நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். இதனால் கனகராஜ், மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து கட்சியினர் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் கைதான இருவரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நடுவர் கலைவாணன் ஜாமின் வழங்கினார்.

