ADDED : பிப் 08, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில் 2026 சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பான நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீ நரிவிழி அம்மா பார்ட்டி மஹாலில் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மதுரை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் ராமசேகர், தரவு தளப்பிரிவு மாநில துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். மாநகர் வடக்கு மண்டல் தலைவி சுந்தரி வரவேற்றார். தெற்கு மண்டல் தலைவர் பொன்முருகேசன் நன்றி கூறினார்.