/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ.,வில் 67,500 பூத் கமிட்டிகள் தி.மு.க.,வை விட அதிகம் அமைப்பு; மாநில பொதுச்செயலாளர் பெருமிதம்

ADDED : பிப் 05, 2026 06:00 AM
திண்டுக்கல்: ''தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வை விட அதிகளவில் பா.ஜ., 67,500 பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக அமெரிக்காவின் வரிவிதிப்பு குறைப்பை பார்க்கிறோம் '' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
பல்வேறு தொழில் அமைப்புகள் மத்திய பட்ஜெட் அறிவிப்பை பாராட்டி உள்ளன. இந்திய நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் உட்பட தொழிலதிபர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவிற்கு 33.6 சதவீதத்தில் இருந்து 14.6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வரிவிதிப்பு சீனாவிற்கு 31 சதவீதம், தென்கொரியாவிற்கு 21 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, மலேசியாவுக்கு தலா 19 சதவீதம் என உள்ளது. இது பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி.
மாநிலத்தில் மொத்தம் 68 ஆயிரம் பூத்கள் உள்ளன. ஆளும் தி.மு.க.,வோ 67 ஆயிரம் பூத் கமிட்டிகள்தான் அமைத்துள்ளது. பா.ஜ., 67,500 பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது என்றார்.