/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடை புகையிலை விற்ற 16 கடைகளுக்கு 'சீல்'
/
தடை புகையிலை விற்ற 16 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 05, 2026 05:44 AM
திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக் கல்லுாரிகள் அருகே தடை புகையிலைப் பொருட்களை விற்ற 16 கடைகளுக்கு 'சீல்' வைத்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்ததோடு 27 கிலோ புகையிலைகளை கைப்பற்றினர்.
மாவட்டத்தில் தடை புகையிலைப் பொருட்கள் விற்பனை ஜோராக நடப்பதாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் (ஆத்துார்), ஜோதிமணி (திண்டுக்கல் ஊரகம்), சரண்யா (நிலக்கோட்டை), முருகன் (திண்டுக்கல் நகர்), ஜாபர்சாதிக் (நத்தம்), வசந்தன் (வடமதுரை, சாணார்பட்டி ஆகியோர் இணைந்து சித்தையன்கோட்டை, சித்தரேவு, நெல்லுார், அய்யம்பாளையம், கோனுார், கன்னிவாடி, தர்மத்துப்பட்டியிலும் ரெட்டியார்சத்திரம், கம்பிளியம்பட்டி, வடமதுரை, வேடசந்துார் பகுதி பள்ளிக் கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் இருந்த 27 கிலோ புகையிலைகளை பறிமுதல் செய்தனர். இதன் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து 16 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.

