ADDED : ஏப் 11, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், நகரத் தலைவர் குமார்தாஸ், முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்திர மூர்த்தி கலந்து கொண்டனர்.