ADDED : மே 24, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் -நத்தம் ரோடு குள்ளனம்பட்டியில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் திறந்து வைத்தார்.மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட பார்வையாளர் ரவி பாலா முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொதுச்செயலாளர்கள் சந்திரசேகர், முத்துக்குமார், ஆனந்தி, செயலர்கள் தமிழ்நாதன், சபாபதி, பொருளாளர் கருப்புசாமி, துணைத்தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கனகராஜ், தனபாலன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் கலந்து கொண்டனர்.