ADDED : நவ 12, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா சிறுகுடி முத்தாலம்மன் கோயிலை ஹிந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி பாரதியஜனதா சார்பாக நத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் கதிலி நரசிங்கபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் தனபாலன், மாவட்ட பொருளாளர் கருப்புசாமி,சட்டசபை தொகுதி பார்வையாளர் சொக்கர், சிறுகுடி ஆசை அலங்காரம் முன்னிலை வகித்தனர். பா.ஜ ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் பேசினார்.

