/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை கூட்டம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

ADDED : ஜூன் 04, 2025 01:09 AM

திண்டுக்கல்: மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். திண்டுக்கல் பா.ஜ., கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கனகராஜ், தனபால், பாண்டி முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற பா.ஜ., மாநிலை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,'' தி.மு.க., பொதுக்குழு கூட்டிய போதெல்லாம் ஆட்சிக்கு வந்ததில்லை. 1977 ல் பொதுக்குழுவை கூட்டினர். அதன் பின் 12 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்தனர். அதேபோல் மதுரை என்றாலே தி.மு.க., விற்கு ராசியில்லை. முருகன் மாநாட்டிற்கு பூத் வாரியாக அதிகளவில் மக்களை அழைத்து வர வேண்டும். அவர்களுடான நெருக்கம் ஏற்படும் என்றார். மாநில அமைப்பு பொதுச்செயலர் கதலி நரசிங்கபெருமாள், மதுரை கோட்ட அமைப்பு செயலர் ராமசேகர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர்கள் முத்துக்குமார், சந்திரசேகர் கலந்து கொண்டனர்.