UPDATED : அக் 02, 2026 12:58 AM
ADDED : அக் 02, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செப்.28ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசி, அவர்களது கொடும்பாவியை காங்., கட்சி நிர்வாகிகள் எரிக்க முயன்றனர்.
காங்., கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், சந்திரசேகர், ஆனந்தி முன்னிலை வகித்தனர்.
தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் போஸ், தனபாலன், சசிராமன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர். பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.
