/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட தலைவர்களை தவிர பிற பொறுப்புகள் நியமிக்காததால் பா.ஜ., தொண்டர்கள் சுணக்கம்
/
மாவட்ட தலைவர்களை தவிர பிற பொறுப்புகள் நியமிக்காததால் பா.ஜ., தொண்டர்கள் சுணக்கம்
மாவட்ட தலைவர்களை தவிர பிற பொறுப்புகள் நியமிக்காததால் பா.ஜ., தொண்டர்கள் சுணக்கம்
மாவட்ட தலைவர்களை தவிர பிற பொறுப்புகள் நியமிக்காததால் பா.ஜ., தொண்டர்கள் சுணக்கம்
ADDED : மார் 19, 2025 05:22 AM
திண்டுக்கல் : தமிழக பா.ஜ., வில் மாவட்ட தலைவர் பொறுப்பு நியமனத்தை தவிர பிற பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாமல் உள்ளதால் பிரதான கட்சிகளைப் போல் தேர்தல் பணிகளை தொடங்காமல் பா.ஜ., தொண்டர்கள் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
பா.ஜ., வை பொறுத்தவரையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில் தமிழக பா.ஜ., வில் செப்டம்பரில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து உட்கட்சித் தேர்தல் தொடங்கின. கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் என பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட தலைவர் நியமனம் முடிந்துள்ள நிலையில் பிற பொறுப்புகளுக்கு நியமனம் இல்லாததால் கட்சி பணிகளில் தொண்டர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பூத் கமிட்டி வரை பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகின்றன. ஆனால் பா.ஜ., வில் பொறுப்புகள் ஏதும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் தொண்டர்கள் என்ன செய்வதென்று தவித்து வருகின்றனர்.
பா.ஜ., வினர் கூறியதாவது : மாநில தலைவர் தேர்வு முடிந்த பின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் உட்பட பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. ஆனால் தாமதமாகி வருகிறது. இதனால் முன்னாள் பொறுப்பாளர்கள் என்ன பதவி வரும் என்பதில் ஆர்வத்தில் உள்ளனர். வந்த பின் பணிகளை பார்க்கலாம் என நினைக்கின்றனர். எதிர்வரும் தேர்தல் முக்கியமானது. பிரதான கட்சிகள் அனைத்தும் களமிறங்கி பணியாற்றி வருகின்றன. ஆனால் பா.ஜ., தரப்பில் எந்தவித பணிகளும் நடக்காமல் பொறுப்பு, நியமனத்திற்காக காத்திருப்பு மட்டுமே நடக்கிறது. நோட்டீஸ் அடிக்க கூட முடியவில்லை. தலைவர் அண்ணாமலை தான் மீண்டும் மாநில தலைமையேற்க வேண்டுமென பெரும்பாலோனோர் நினைக்கிறோம். அவர்தான் என்றால் தாமதம் தேவையில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.