/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இயற்கை வளங்களை காக்க பா.ஜ., வலியுறுத்தல்
/
இயற்கை வளங்களை காக்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2025 02:48 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார் சஞ்சய்காந்தியிடம் பா.ஜ. மேற்கு ஒன்றிய தலைவர் நாட்டுதுரை தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் , ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு ஊராட்சிகளில் தமிழக அரசின் எவ்வித முன் அனுமதி இன்றி 200க்கு மேற்பட்ட கனரக வாகனங்களில் இரவு பகல் என பாராமல் மண் , கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம ரோடுகள் , பாலங்கள் சேதம் அடைவதோடு அதிவேகமாக வரும் கனரக வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தோடு சாலையை கடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவட்ட துணைத் தலைவர்கள் நாச்சிமுத்து, ரவிச்சந்திரன், செயலாளர்கள் ருத்திரமூர்த்தி, பெரியசாமி, வழக்கறிஞர்கள் கஜேந்திரன், சிவசாமி, நகரத் தலைவர் குமார்தாஸ், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் முருகசாமி உடன் இருந்தனர்.